Home Temple Festivals

Temple Festivals

கொடிக்தம்பம்

கதிரமலைக்கந்தன் முன்புறமாகக் கிழக்கு நோக்கி கொடிக்தம்பம் அமைந்துள்ளது. ஆடிமாத உற்சவ காலங்களில் தம்பத்தில் கொடிபறக்க விடப்படும். தீர்த்த உற்சவம் முடிந்தவுடன் கொடி இறக்கப்படும். இதுவே கொடியேற்றமாகும்.

இவ்வாலயத்தில் பக்தர்கள் கற்பூரச்சட்டி மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்து தத்தமது நேர்த்திக்கடன்களைச் செலுத்துவர்.

ஆடி மாதத்தில் பொpய கதிர்காமத்தில் உற்சவம் நடைபெறும் காலங்களில் அங்கே நடைபெறும் பூi முறைப்படியே இங்கேயும் வழிபாடு நடைபெறுகிறது. திரை நீக்காது உள்ளேயும் வெளியேயும் கற்பூரச்சட்டி ஆராத்தி பூi நடைபெறும். அதனைத் தொடர்ந்து உள்ளே இருந்து இயந்திரப் பேழையொன்றை எடுத்து வந்து அதற்காக வடிவமைக்கப்பெற்ற ஞானசக்தி வேலுடன் இணைத்து அருவுருவம் கொண்ட பேழையையும் சிம்மாசனத்தில் வைத்து ஊர்வலத்துக்காகச் செய்த 11அடி உயரம் கொண்ட ஜராவதயானை மேல் வைத்து ஆலயத்தின் முன்பு உள்ள சிவாலயத்தைச் சுற்றி வீதிவலம் வரும் நிகழ்வின்போது பக்தர்கள் புடைசூழ குடை கொடி ஆலவட்டம் மங்கள இசை கற்பூரச்சட்டி சகிதம் உற்சவ காலங்களில் தினமும் மாலை 6 மணிக்கு வீதிவலம் வருவதுண்டு. பூiயின் போது பூi செய்யும் அந்தணர் மஞ்சள் துண்டினால் தன் அங்கங்கள் அனைத்தையும் மூடி ஒரு கையில் கற்பூரச் சட்டியும் மற்றெhரு கையில் காவடியும் ஏந்திய வண்ணம் அரோகரா அரோகரா என்னும் மந்திரகோஷத்துடன் நடந்து வரும்போது பக்தர்கள் பின்னால் கோஷங்களை எழுப்புவர். இதுவே உற்சவ வழிபாடு. உற்சவத்தின்போது பூi முடிந்தபிறகு பிரசாதமாக தேனும் தினைமாவும் கலந்து கொடுக்கப்படும்.


தீர்த்தோற்சவம்

தீர்த்தத் தினத்தன்று 4.30 மணியளவில் பூகைள் ஆரம்பமாகி சுவாமி வீதிவலம் வந்து 16 அடி உயரமுள்ள பச்சை ஓலைகளால் கூடு அமைத்து அதன் உச்சியில் கங்கைநீர் கொண்டு அருள்மிகு இயந்திரப்பேழை பொக்கிஷத்தை தீர்த்தமாடியபின் தீர்த்தமாடிய ஜலத்தையும் புஸ்பங்களையும் வானத்தில் இருந்து சொhpவதைப் போன்று பக்தர்கள் மேல் சொhpவார்கள். இந்நிலை ஓர் பரவசநிலையாகும். தீர்த்தத்தினத்தில் கற்பூரச்சட்டி காவடி கரகம் ஏந்தி தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர். நாட்டின் அசம்பாவித காலங்களில் பொpய கதிர்காமம் சென்று வழிபடமுடியாத போது 1953ம் ஆண்டு இவ்வழிபாட்டுமுறை ஆரம்பமானது. மக்கள் இவ்வாலயத்தை சின்னக்கதிர்காமம் என்று அழைப்பர். இதுவே கதிர்காமத்தின் வழிபாட்டுமுறை.

ஆடிவேல் சுற்றுலா

தீர்த்த உற்சவத்துக்கு மறுநாள் மூன்று தினங்கள் யாழ் வீதிகள் அனைத்தும் பவனி வருவதுண்டு. யாழ்ப்பாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பெருமைமிக்க ஆலயமாகிய நல்லை ஆதினம் வீரமாகாளியம்மன் கோவில் வண்ணார் வண்ணை சிவன் கோவில் வண்ணை நாச்சிமார் அம்மன் கோவில் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கோவில் திருநெல்வேலி சிவகாமி அம்மன் கோவில் ஆகிய ஆலயங்களின் அனுசரணையுடன் இவ்விழா நடைபெறுகின்றது. இவ்வாலயங்கள் வேல்ரதம் தாpத்து நிற்கின்ற போது ஏராளமான மக்களுக்கு அன்னதானம் வழங்கி சேவை செய்கின்றனர். இச்செயற்பாடு அறநெறி தர்மநெறியைப் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். ஆடிவேல் சுற்றுலாவின்போது முதலில் வேல் ஏந்திய ஊர்தி செல்ல அதன் பின் ஜராவதயானை பூரண கும்பம் ஏந்திச் செல்ல அதன் பின்னால் முருக பக்தன் இடும்பன் காவடியை ஏந்திவர அதனை அடுத்து முருகனின் படைவீரர்களாகிய நவவீரர்கள் வெற்றிப் பரவசத்தில் கொடிகள் ஏந்தி அணிவகுத்து வர அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியம் போpகை பறை வானளாவி இசை எழுப்ப எம்பெருமான் பாலமுருகன் அழகிய ரதத்தில் ஏறிவர அழகிய காளை மாடுகள் புடைசூழ யாழ் நகாpல் பவனிவரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். மூன்றhம் நாள் சுற்றுலா பாலகதிர்காமத்தை நோக்கிவரும் போது இந்துப் பாரம்பாpய கலை கலாசார தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நிகழ்வாக காவடி கரகாட்டம் குதிரையாட்டம் மயிலாட்டம் கோலாட்டம் கம்படி சிலம்படி தீப்பந்த விளையாட்டுக்கள் வானவேடிக்கைகள் இன்னும் பல நிகழ்வுகளுடன் மின்சார அலங்காரங்களுடன் மிளிர வீதியனைத்தும் வாழை தோரணங்கள் பூரணகும்பம் வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் திரளாகப் புடைசூழ ஆலயத்தை வந்தடைவார். அதன் பின்பு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆடிவேல் ரதபவனி பூர்த்தியடையும்.


ஸ்ரீ பாலகதிர்காம ஆலய முகப்பு தோற்றம்


ஸ்ரீ பாலகதிர்காம ஆலயத்தின் மூலஸ்தானம்


நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் ஆடிவேல் முதலாம் நாள் காலை 9.00 மணிக்கு தங்குமிட


நல்லூர் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானம் ஆடிவேல் முதலாம் நாள் நண்பகல் தங்குமிடம்


யாழ் வண்ணார் வண்ணை சிவன் தேவஸ்தானம் ஆடிவேல் முதலாம் நாள் மாலை இரவு தங்குமிடம்


யாழ் வண்ணை நாச்சிமார் அம்மன் தேவஸ்தானம் ஆடிவேல் இரண்டாம் நாள் 12.00 மணிக்கு தங்குமிடம்


கொக்குவில் மஞ்ச வனப்பதி முருகன் ஆலயம் ஆடிவேல் விழா இரண்டாம் நாள் இரவு தங்குமிடம்


திருநெல்வேலி சிவகாமசுந்தரி அம்மன் தேவஸ்தானம் ஆடிவேல் மூன்றாம் நாள் தங்குமிடம் நண்பகல் நேரம் 12.00