நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தானத்தில் 450 வருடப் பழைமை மிக்க கட்டிடங்களில் திருத்த வேலைகளும்
புராதனமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தானத்தில் 450 வருடப் பழைமை மிக்க கட்டிடங்களில் திருத்த வேலைகளும் , சிற்ப – சித்திர- மீளுருவாக்கத் திருப்பணிகளும் , வர்ணம் தீட்டும் பணிகளும் , மின்னலங்காரங்கார வேலைகளும் , இன்ன பிறவும் பல லட்ஷ ரூபா செலவில் கடந்த கார்த்திகை மாதம் முதலாக SASHO Engineering நிறுவனத்தின் பொறுப்பில், பொறியியலாளர் திரு.ரூபன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடை பெற்றுக்கொண்டுள்ளது . இத்தெய்வத் திருப்பணியில் அடியவர்களும் இணைந்து கொண்டு இந்திரலோக அமரரும் வந்திறைஞ்சும் அதிசுந்தரமான திருக்கோயில் அமைந்திட வழிசமைப்பீர்களாக !!
Leave a Reply
You must be logged in to post a comment.