Home ஆலய வடிவமைப்பு

ஆலய வடிவமைப்பு

ஸ்ரீ பால கதிர்காம ஆலய வடிவமைப்பு

  • ஆலயம் கிழக்கு முகமாகவுள்ளது.
  • மூலஸ்தானம் அருவ உருவ வழிபாடு
  • தென்மேற்கு மூலையில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • வடமேற்கு மூலையில் விபூதி மலைக்கந்தன் ஆலயம்
  • மூலஸ்தான வடக்குப்புறமாக வள்ளிமலை அமைந்துள்ளது.
  • இதன் முன்புறமாக சரவணப் பொய்கை ஆறு குழந்தைகள் தவளும் தடாகம்.
  • கிழக்கு வாசல் வடமூலையில் கதிரமலைக்கந்தன் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்பு கொடிக்கம்பம் அமைந்துள்ளது.
  • இதுவே ஆலயத்தின் ஸ்தலங்களாகும்.

 

ஆலய வழிபாட்டு முறைகள்

உயர்வு தாழ்வற்று பாகுபாடு அற்று அனைவரும் பக்திப் பரவசத்துடன் முருகன் திருப்புகழ் பஜனைகள் பாடி வழிபடுவார்கள். காலை மாலை இரண்டு காலங்களில் பூi நடைபெறும் வழிபாட்டின் போது கற்பூர ஆராத்தி மட்டுமே காட்டப்படும். இறைவனுக்கு சமர்ப்பண மந்திரமாக திருப்புகளே ஓதப்படும்.


ஸ்ரீ பாலகதிர்காம ஆலய முகப்பு தோற்றம்


ஸ்ரீ பாலகதிர்காம ஆலயத்தின் மூலஸ்தானம்


வள்ளி திருமண காட்சி

மாணிக்கப் பிள்ளையார் சன்னிதானம்

விநாயகர் குன்றின் நடுவிலே அமைந்திருப்பார். விநாயகரைச் சுற்றி கங்கைநீர் விடப்பட்டிருக்கும் மாணிக்கப் பிள்ளையாhpன் தீர்த்தத்தை பக்தர்கள் தலையில் தௌpத்தும் அருந்துகின்றபோதும் மாணிக்க கங்கையில் மூழ்கி தீர்த்தமாடிய நிலையை அடியார்கள் உணர்கின்றhர்கள்.


மாணிக்கப் பிள்ளையார் சன்னிதானம்

விபூதிமலைக் கந்தன் சன்னிதானம்

பிள்ளையார் சன்னிதானத்தை அடுத்திருப்பது விபூதிமாலைக் கந்தன். குன்றின் நடுவிலே பழநியாண்டவராக முருகன் அமைந்திருக்கிறhர். மலையைச் சுற்றி விபூதி இடப்பட்டிருக்கும். இவ்விபூதியை எடுத்து நெற்றியில் தாpப்பார்கள்.


விபூதிமலை கந்தன் சன்னிதானம்

வள்ளிமலை

விபூதி மலையை அடுத்து வள்ளிமலை அமைந்துள்ளது. வள்ளிமலை உயர்ந்த குன்று அமைத்து வள்ளிதினைப்புலம் காக்கும் வகையில் அமைந்துள்ளது. அடியார்கள் அம்மலையைச் சுற்றி படிகளில் ஏறி வள்ளியின் பாதங்களைத் தொட்டு வழிபடுவர்.


வள்ளிமலை சன்னிதானம்

சரவணப்பொய்கை

அதனை அடுத்து சரவணப் பொய்கை அமைந்துள்ளது. தடாகத்தில் ஆறு தாமரை மலர்களில் ஆறு வதனங்களில் தனித்தனியாகக் கொண்ட ஆறு குழந்தைகள் சிhpத்தும் அழுதும் தவண்டும் இருந்தும் நின்றும் சாய்ந்தும் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களும் பொpயோர்களும் தடாகத்தில் இருக்கும் நீரை இரண்டு கைகளாலும் எடுத்துக் குழந்தைகளுக்கு தௌpத்து மகிழ்ச்சியடைவர்.


சரவணப் பொய்கை

கதிரமலைக் கந்தன்

கதிரமலைக் கந்தன்அதனை அடுத்திருப்பது குன்றின் மேல் இருக்கும் கதிரமலைக் கந்தன். ஆறு படிகளின் மேலே ஏறி முருகனின் பாதத்தைத் தொட்டு மலையைச் சுற்றிவந்து வழிபடுவர்.

கதிர்மலை கந்தன் சன்னிதானம்